முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளில் கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேவையான சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப பரீட்சைகள் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மாணவர்களின் மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களும் பாரீட்சை எழுதுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் அதே நேரத்தில் க.பொ.த. உயர்தர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நவம்பர் 06 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.