எச்சரிக்கை..! கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!!

பதிவுசெய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து சிம் அட்டைகளும் இன்று முதல் இரத்து செய்யப்படும் என்று இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வெளிநாடுகளில் இருந்து கையடக்க தொலைபேசிகளை கொண்டு வந்தவர்கள் தங்கள் தொலைபேசிகளை இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் வலைத்தளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து மாத்திரம் கொள்வனவு செய்யுமாறும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

எந்தவொரு கைடக்கத் தொலைபேசியின் 15 இலக்க IMEI எண்ணை 1909 என்ன எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்புவதனூடாக பதிவினை சரிபார்க்கலாம்.

Related Posts