தனியார் வகுப்புகளை நடத்தும் இறுதித் திகதி அறிவிப்பு!!

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகள் நடத்துவதற்கான இறுதி திகதி கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனைத்து தனியார் கல்வி வகுப்புகளும் ஒக்டோபர் 6ஆம் திகதிக்குள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரேத்தியேக வகுப்புகள் ஒக்டோபர் 7ஆம் திகதி நள்ளிரவுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related Posts