பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த 6 மாதக் குழந்தை!!

பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த 6 மாதக் குழந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று சாவகச்சேரி பிரதேசத்தில் நடந்துள்ளது.

கிளிநொச்சி, அக்கராயனில் இருந்து பெண் ஒருவர் பஸ்ஸில் யாழ்ப்பாணம் வந்துள்ளார். பஸ் வாசலின் அருகில் இருந்த இருக்கையில் அவர் அமர்ந்திருந்த நிலையில், பஸ் சடுதியாக பிறேக் அடித்து நிறுத்தப்பட்டுள்ளது.

வீதியில் குறுக்கே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்ததை அடுத்தே பஸ் சாரதி பஸ்ஸை சடுதியாக நிறுத்தியுள்ளார். அப்போது பெண்ணின் கையில் இருந்த குழுந்தை தவறி பஸ் வாசல் ஊடாக வீதியில் விழுந்துள்ளது.

குழந்தை உடனடியாகச் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து மேலதிக சிசிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

Related Posts