பருத்தித்துறை வியாபாரி மூலையில் கத்திக் குத்து – ஒருவர் உயிரிழப்பு!

பருத்தித்துறை வியாபாரி மூலையில் கத்திக் குத்துக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மந்திகை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

பருத்தித்துறை வியாபாரி மூலையில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது -39) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts