கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் எழுமாறாக 100 பேரின் உயிரியல் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய 9 மாகாணங்களின் சுகாதாரத் திணைக்களங்களால் அடுத்த ஒரு வருடத்துக்கு எழுமாறாக தெரிவு செய்யப்படும் நபர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி கடந்த புதன்கிழமை நாச்சிக்குடா பகுதியில் 20 பேரிடமும் மறுநாள் வியாழக்கிழமை கிளிநொச்சி நகரில் 50 பேரிடமும் தொடர்ந்து பளை பகுதியில் 30 பேரிடமும் எழுமாறாக தெரிவு செய்யப்பட்டு கோரோனா தொடர்பான பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
தென்பகுதிக்குச் சென்று வந்தவர்கள், பாரவூர்திச் சாரதிகள், பொலிஸார், முதியோர் இல்லத்தில் தங்கியிருப்போர், விடுதிகளில் தங்கியிருப்போர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்டோரிடமே இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.