யானையின் தாக்குதலுக்குள்ளான விரிவுரையாளர் யாழிலிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம்!

கிளிநொச்சியில் அண்மையில் யானையின் தாக்குதலில் காயமடைந்த விரிவுரையாளர் காயத்திரி டில்ருக்சி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்க நேற்று (புதன்கிழமை) மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த குறித்த பல்கலைக்கழக விரிவுரையாளர் வழிபாட்டு இடத்திற்கு சென்று விடுதிக்குத் திரும்பிய வேளை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.

அதில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசானைவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த யானை தாக்குதல் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன் தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான கொழும்பு, களனிய பகுதியைச் சேர்ந்த காயத்திரி டில்ருக்சி (வயது-32) என்பவரே காயமடைந்தமை குறிப்பிப்பிடத்தக்கது.

Related Posts