ஒரு தொற்று நோயாக மாறக்கூடிய புதிய வகைக் காய்ச்சல் சீனாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தக் காய்ச்சல் சமீபத்தில் வெளிப்பட்டுள்ளது. பன்றிகளால் இந்த வைரஸ் பரவுகிறது. எனினும் ஆனால் மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞான ஆய்வு இதழான பிஎன்ஏஎஸ் வெளியிட்டுள்ளது.
ஜி4 என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸ் 2009ஆம் ஆண்டில் ஒரு தொற்று நோயாக எச்1என்1 விகாரத்திலிருந்து மரபணு ரீதியாக வந்தது.