வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின் போது வடக்கு மக்களின் பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீள கட்டியெழுப்புதல் மற்றும் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகு மூலம் வருகை தருகின்றவர்களை தடுப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
அதற்கமைய வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.