க.பொ.த. உயர்தரப் பரீட்சை செப்ரெம்பர் 7ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 2ஆம் திகதிவரையும் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்ரெம்பர் 13ஆம் திகதியும் நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 8ஆம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டால் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன அதற்குப் பின்னரே நடத்த முடியும்.
இதனடிப்படையில் ஓகஸ்ட் மாதம் நடத்தத் திட்டமிட்டிருந்த இரண்டு பரீட்சைகளும் செப்ரெம்பர் வரை ஒத்திவைக்கப்பபட்டுள்ளது.