எதிர்வரும் 30 நாட்களுக்குள் உலக சுகாதார ஸ்தாபனம் எடுக்கும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால் அமெரிக்காவின் நிதியுதவிகளை உலக சுகாதார ஸ்தாபனம் இழக்க வேண்டி வரும் என காலக்கெடுவிதித்து எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.
இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடித்திலேயே மேற்கண்டவாறு காலக்கெடு விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் எதிர்வரும் 30 நாட்களில் பெரும் அளவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.
அவ்வாறு எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்றால் இந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வரும் முழுமையான நிதி உதவிகளும் நிறுத்தப்படும்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியின் கடிதம் கிடைத்துள்ளதாகவும் இந்த விவகாரம் குறித்து உரிய நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் மீதும் அமெரிக்க ஜனாதிபதி ஆரம்பத்தில் இருந்து விமர்சனங்களை முன்வைத்துள்ளதுடன் உலக சுகாதார ஸ்தானத்தின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்திவிட்டதாகவும் குற்றம்சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.