காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!!

ஏப்ரல் 16 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர, அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த விதிமுறைகள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வழங்கிய அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கும் பொருந்தும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts