சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை – பொலிஸார்

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத நபர்கள் மீது இன்று (புதன்கிழமை) முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக புலனாய்வு துறையினரும் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், குறித்த நடைமுறை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

அந்தவகையில் குறித்த விதிமுறைகளையே மீறுபவர்கள் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அன்றாட நடவடிக்கை மற்றும் அலுவலக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமானதை தொடர்ந்து பொதுமக்களின் நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸார் திருப்தியடையவில்லை என்றும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்தோடு சுகாதார நடைமுறைகளை மக்கள் பின்பற்றுகின்றார்களா என்பதை கண்காணிக்க கொழும்பில் 104 சி.சி.டி.வி. கமராக்களை பொலிஸார் கண்காணித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts