ஆனையிறவு ஊடான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை- கிளி. அரசாங்க அதிபர்

ஆனையிறவு ஊடான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள மக்கள் தமது தேவைகளுக்காக அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்க கிளிநொச்சி நகருக்கு பயணிக்க முடியும் என கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் உள்ள மக்கள் மாவட்ட செயலகம் மற்றும் ஏனைய நிர்வாக செயற்பாடுகளுக்கு கிளிநொச்சி நகரிற்கு வருகை தருவதில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயம் பலரது கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து போக்குவரத்து இலகுபடுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts