சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட 15 பேரிடமும் காரைநகரைச் சேர்ந்த ஒருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.
இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ் போதகர் தலைமையில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்றவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா என வடக்கு மாகாணத்தில் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களது சுயதனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் நிலையில் அவர்களது மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 16) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட 15 பேரிடமும் காரைநகரைச் சேர்ந்த ஒருவரிடமும் மாதிரிகள் பெறப்பட்டு மானிப்பாய் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் வைத்து மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்கள் 16 பேருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.