Ad Widget

கோயில்களில் ஒன்றுகூடியவர்களை 21 நாட்களுக்கு தனிமைப்படுத்திய பொலிஸார்!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் உத்தரவினையும் மீறி திருகோணமலையில் புதுவருட பூசை வழிபாடுகளுக்காக இந்து ஆலயங்களில் ஒன்றுகூடியவர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (திங்கட்கிழமை) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது

உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா ஸ்ரீ காயத்திரி கோயிலில் ஒன்றுகூடிய 13 பேர் உப்புவெளி பொலிஸாராலும், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்திரகாளி அம்மன் கோயிலில் ஒன்றுகூடிய 11 பேர் தலைமையகப் பொலிஸாராலும் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் 21 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள் ஒன்றுகூடிய கோயில்களில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

Related Posts