கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று (ஏப்ரல் 14) செவ்வாய்க்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 219ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.
59 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
153 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் 142 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.