கோரோனா பாதிப்புக்காரணமாக பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் லண்டனில் உயிரிழப்பு!!

பூநகரியைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிப்பவருமான ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன், கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று (ஏப்ரல் 9) உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை அவரது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.

30 வயதுடைய ஆனந்தவர்ண்ணன், பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதனின் மகனாவார்.

ரிரிஎன் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஊடகத்துறையில் ஆனந்தவர்ணனின் ஆளுமை மிகப்பெரியது .

அத்துடன், பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினராகம் அவர் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts