நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுப் பாதித்த 7ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.
தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு கல்கிசையைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 42 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
139பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் 228 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.