நாட்டில் கோரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச் ) சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 178 பேர் (ஜனவரியின் இனங்காணப்பட்ட சீனப் பெண் உள்பட) கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 38 பேர் (சீனப் பெண் உள்பட) முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
6 பேர் உயிரிழந்துள்ளனர். 134 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.