இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 178 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது வைத்தியசாலையில் 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை கொரோனா தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான 34 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts