யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது.
இந்தநிலையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனா தொற்றுக்கு இலக்கான சுவிஸ் மத போதகரைச் சந்தித்தவர்களே தொடர்ந்தும் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆகவே இந்த வைரஸின் தீவிரத்தன்மையை யாழ்.மக்கள் உணர்ந்து ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதால் தான் யாழில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைவாக உள்ளது. ஆகவே ஊரடங்கு வேளையில் மக்கள் வீடுகளுக்குள் இருப்பதே பாதுகாப்பானது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.