மார்ச் மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வந்த அனைவரையும் நாளை முதலாம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
பதிவு செய்யாமல் மறைந்திருந்தை தொடர்பில் கண்டறியப்படுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மார்ச் மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டவர்கள் மற்றும் நாடு திரும்பிய இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிப்புச் சிகிச்சைக்குட்படுத்தி விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
மார்ச் மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்து தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படாமல் உள்ளனர் என்று அரசு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.