மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மரக்கறி மொத்த விற்பனை நிலையத்திற்கு வௌியே விற்பனை செய்யப்படும் போது, சில்லறை விலையாக ஒரு கிலோகிராமிற்கு 40 ரூபாய் மாத்திரமே மேலதிகமாக அறவிடப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்,
கரட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 150 ரூபாய்,
லீக்ஸ் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 120 ரூபாய்,
போஞ்சி 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 120 ரூபாய்,
கோவா 1 கிலோகிராமின் உச்சப்பட்ச மொத்த விலை 100 ரூபாய்,
பீட்ரூட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 80 ரூபாய்,
கறிமிளகாய் 1 கிலோகிராமின் உச்சப்பட்ச மொத்த விலை 150 ரூபாய்,
தக்காளி 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 100 ரூபாய்,
வெண்டைக்காய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 70 ரூபாய்,
வாழைக்காய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 70 ரூபாய்,
கத்தரிக்காய் 1 கிலோகிராமின் மொத்த விற்பனை விலை 100 ரூபாய்,
தேசிக்காய் மற்றும் இஞ்சியின் அதிகபட்ச மொத்த விலை 150 ரூபாய்,
காய்ந்த மிளகாய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 200 ரூபாய்,
என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.