Ad Widget

யாழ்ப்பாணத்தில் போதகருடன் 150-180 பேர் நெருக்கமாக பழகியுள்ளனர் – இராணுவத்தளபதி

சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த மதப் போதகருடன் 150 தொடக்கம் 180 பேர் நெருக்கமான தொடர்பாடலைக் கொண்டிருந்துள்ளனர் என்று இராணுவத் தளபதியும் கோரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஆராதனை இடம்பெற்றுள்ளது.

இந்த ஆராதனையை சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த போதகர் நடத்தியுள்ளார். சுவிஸூக்கு திரும்பிய நிலையில் அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அவரைச் சந்தித்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட போதகருடன் 150 தொடக்கம் 180 பேர் நெருக்கமான தொடர்பைப் பேணியுள்ளனர். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன” என்று இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts