பல்கலை. அனுமதிக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

2019/2020 கல்வியாண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர் அனுமதிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி வரும் ஏப்ரல் 9ஆம் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மாணவர் கையேடுகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்திலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

கையேடுகளில் குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களை நன்கு ஆராய்ந்ததன் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கு இணையத்தின் (Online) ஊடாக விண்ணப்பிக்குமாறு பேராசிரியர் சம்பத் அமரதுங்க மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts