தற்போதைய யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேரா யாழ். மாவட்டத்துக்கான பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி ஏற்ற ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் இன்று காலை 6.30 மணியளவில் யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர தலைமையில் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். தலைமை நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா பிரதிப் பொலிஸ்மா அதிபரை வரவேற்று சிறப்புரை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.