யாழ்.இளவாலை பகுதியில் கடற்படை சிப்பாயை சூலத்தால் குத்திய இளைஞன் மீது பொலிஸாா் நடாத்திய தாக்குதலையடுத்து சூலத்தால் குத்து வாங்கிய கடற்படை சிப்பாயும், பொலிஸாரால் தாக்க ப்பட்ட இளைஞனும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,
இளவலை பகுதியில் சிவில் உடையில் சென்று கொண்டிருந்த கடற்படை சிப்பாய்க்கும், அப்பகுதியால் சென்ற இளைஞனுக்கும் இடையில் தா்க்கம் மூண்டிருக்கின்றது. இதனையடுத்து இருவரும் அடித்துக் கொண்ட நிலையில்,
கோபமடைந்த இளைஞன் கோவிலில் இருந்த சூலத்தை எடுத்து கடற்படை சிப்பாயை குத்தியுள்ளான். இதனையடுத்து படுகாயமடைந்த கடற்படை சிப்பாயை பொதுமக்கள் மீட்டு தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதித்திருக்கின்றனா். இந்த சம்பவத்தையடுத்து
தாக்குதல் நடாத்திய இளைஞனை கைது செய்த பொலிஸாா் இளைஞன் மீது மூா்க்கத்தனமான தாக்குதல் நடாத்திய நியைலில் படுகாயமடைந்த இளைஞன் நேற்று அதிகாலை 2 மணியளவில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.