கொரோனா வைரஸ் – பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்

புதிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொடர்பில் சர்வதேச ரீதியில் காணப்படும் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கான பயணத்தை முடிந்தவரை இரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பில்நேற்று(9) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் யாசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

குழுக்களாக செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் இரத்து செய்துகொள்ள வேண்டும் என்றும் பணிப்பாளர் நாயகம் அனில் யாசிங்க மேலும் தெரிவித்தார்.

Related Posts