முச்சக்கரவண்டி சாரதிகள் குறித்த 220 முறைப்பாடுகள் யாழ். பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான கலந்துரையாடல் நேற்று யாழ். தம்பர் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளின் மேல் பதிவுசெய்யப்பட்ட 220 முறைப்பாடுகளில், 14 முறைப்பாடுகள் தவறான செயல்களில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தவறான செயற்பாடுகளை முச்சக்கரவண்டி சாரதிகள் திருத்திக்கொள்ள வேண்டுமென்றும், பொதுமக்களுக்கும், கிராம மக்களுக்கும் சேவை செய்யவே நீங்கள் இருக்கின்றீர்கள். அந்த வகையில், உங்கள் குடும்பங்களின் நலனை கருத்திற் கொண்டு, சாரதிகள் மீதான முறைப்பாடுகளையும் குற்றச் செயல்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் மேலும் கூறினார்.