பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.
இதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு கோரப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.