அதிபர் தாக்கியதில் மூன்று சிறுவர்கள் வைத்தியசாலையில்!!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவர்கள் மூவரை அதிபர் கடுமையாயான தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

அதிபரின் தாக்குதலால் கடுமையான காயங்களுக்கு உள்ளன லக்ஸ்மன், லக்சன் ஆகிய இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் மந்திகை ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டனர்.

9 வயதுடைய இவர்கள் வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத சந்தர்ப்பத்தில் விளையாடிய பொழுது, அதிபர் அவர்களை பச்சை மடடையால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது.

மாணவர்கள் மூவரும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்த்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்காலத்தில் உடல் ரீதியான தண்டனை வழங்குவது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts