இலகு ரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு தேவையான மருத்துவ அறிக்கையினை அரச வைத்தியசாலைகளினூடாக வழங்க அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
அத்துடன் இந்த மருத்துவ அறிக்கையினை வௌியிடக் கூடிய வகையில் அரச வைத்தியசாலைகளின் வசதிகளை மேம்படுத்தவும இதன் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்துனால் உருவாக்கப்படும் மாதிரிக்கு அமைய இந்த சான்றிதழ் விநியோககிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணங்களை பிரதேச செயலாளர் அலுவலகம் அல்லது தபால் அலுவலகம் ஊடாக செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.