பஸ்களில் பயணம் செய்யும் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.மிக வேகமாகச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் வீதிப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்படவுள்ளன.
பருத்தித்துறை நகரில் இருந்து யாழ்ப்பாணம் வருகைதரும் 750 வழி தனியார் பஸ்கள் மிக வேகமான முறையில் சேவையில் ஈடுபடுகின்றன என்று யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவில் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக வீதி போக்குவரத்துப் பொலிஸாரால் அதிவேக சேவையில் ஈடு படும் தனியார் பஸ்கள் அவதானிக்கப்படவுள்ளன. தனியார் பஸ்கள் சேவை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து பயணிகளை ஏற்றுவதற்காக மிக மெதுவாக சேவையில் ஈடுபட்டு அதன் பின்னர் குறிக்கப்பட்ட நேரத்தில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதற்காக மிக வேகமாக பயணம் செய்கின்றன.
இதனால் பஸ்களில் பயணம் செய்யும் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். தனியார் பஸ் சாரதிகள் வேகக் கட்டுப்பாட்டைச் சரியாகப் பின்பற்றுவதுடன் சேவைக்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்கமைவாக சேவையில் ஈடுபட வேண்டும்.
மிக மெதுவான, அல்லது மிக வேகமான சேவை பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.