பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்கென அழைக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் நால்வரும் விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 27ம் திகதியின் பின்னர் யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கைதுகளின் ஒரு பாகமாக புதன்கிழமை பல்கலைக்கழக மாணவிகள் நால்வரை விசாரணைகளுக்கு வருமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றய தினம் பல்கலைக்கழக நிர்வாகத்தினர், பெற்றோருடன் குறித்த மாணவிகள் நால்வரும் வவுனியாவிலுள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸில் சரணடைந்திருந்தனர்.
இதன் பின்னர் குறித்த மாணவிகள் நால்வரும் பொலிஸாரினால் கடுமையான விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்களில் இருவர் வவுனியாவையும், இருவர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.