திடீரென அதிகரித்தது பெற்றோல் விலை

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதுவரை காலமும் 149 ரூபாவாக இருந்த பெற்றொல் புதிய விலையின் பிரகாரம் ஒரு லீற்றர் பெற்றோலின் (ஒக்டெயின் 90) விலை 159 ரூபா ஆகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமும் (லங்கா.ஐ.ஓ.சி) பெற்றோல் விலையை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

பெற்றோலியக்கூட்டுத்தாபனம் பெற்றோல் லீற்றரின் விலையை உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில் தாமும் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுல் படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Posts