தரம் ஐந்து புலைமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சினால் நேற்று(புதன்கிழமை) இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் ரோயல் கல்லூரி 180 புள்ளிகளும், டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி 167 புள்ளிகளும், இசிப்பத்தன கல்லூரி 164 புள்ளிகளும், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி 154 புள்ளிகளும், பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி 175 புள்ளிகளும், ராமநாதன் இந்துமகளிர் கல்லூரி 159 புள்ளிகளும், விவேகானந்தா கல்லூரி 163 புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி 169 புள்ளிகளும், மெதடிஸ்ட் மகளிர் கல்லூரி 167 புள்ளிகளும், இந்து மகளிர்கல்லூரி 158 புள்ளிகளும், கொக்குவில் இந்து கல்லூரி 156 புள்ளிகளும் வெட்டுபுள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சென் மைக்கல்ஸ் கல்லூரி 167 புள்ளிகளும், சிவானந்தா கல்லுரி 153 புள்ளிகளும், வின்சன்ட்மகளிர் கல்லூரி 165 புள்ளிகளும், புனித சிசிலியா மகளிர் கல்லூரி 155 புள்ளிகளும் கல்முனைகார்மேல் பற்றிமா கல்லூரி 166 புள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தின் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி 154 புள்ளிகளும், ஸ்ரீசண்முகா இந்துமகளிர் கல்லூரி 165 புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.