கோதுமை மா ஒரு கிலோ கிராமின் இறக்குமதி வரி 8 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த வரிக் குறைப்பு நேற்றுமுன்தினம் (டிசெ.14) சனிக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
கோதுமை மாவின் இறக்குமதி வரி 36 ரூபாவாக காணப்பட்டது. அந்த வரி முழுமையாக நீக்கப்பட்டு 8 ரூபா புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கோதுமை மாவின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.