வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்தின் 1008ஆவது நாளையும் பிரதிபலிக்கும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய இந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முல்லைத்தீவு நகரத்தில் உள்ள தேவாலயத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரையில் பேரணியாக சென்று செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அத்துடன் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் கோரிக்கைள் உள்ளடங்கிய மகஜரொன்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் கையளிக்கப்படவுள்ளது.