மனித உரிமைகள் தினம் யாழில்

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று யாழில் அனுஷ;டிக்கப்பட்டது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

தேசிய கீதம் இசைக்கப்பட்டு மௌன அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், பிரதம அதிதியாக யாழ். மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி இ.த.விக்னராஜா கலந்து கொண்டார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் என்னும் தலைப்பில், கைதும் தடுத்து வைத்தலும் சித்திரவதையும் எனும் விடயத்தில் யாழ். பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் கே.குருபரனும், சமூக பொருளாதார உரிமைகள் எனும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் சிவனேசனும், பெண்கள் உரிமைகள் எனும் தலைப்பில் வைத்தியர் திருமகளும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் எனும் தலைப்பில் கோசலை மதன் கருத்துரை ஆற்றினார்கள்.

அதேவேளை, சண்டிலிப்பாய் பிரதேச சபையின் ஏற்பாட்டில் யு.என்.டி.பி.யின் அணுசரணையில், நாமும் பாதுகாப்பாய் இருப்போம், மற்றவர்களையும் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது.

இந்நிகழ்வில், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா, யு. என். யாழ். மாவட்ட பிரதிநிதி கொய்னா, மற்றும் யாழ். மதுவரி நிலைய பொறுப்பதிகாரி என்.கிருபாகரன், வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் கே.கனகேஸ்வரன், யாழ். மாவட்ட ஒன்றிணைந்த தனியார் பஸ் உரிமையாளர்களின் இணைய தலைவர் கெங்காதரன், சிவில் சமூக பிரதிநிதி பரந்தாமன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், சுன்னாகம் பொலிஸ் பரிசோதகர் மலகம் உட்பட யாழ். மாவட்ட சிறுவர் உத்தியோகத்தர்கள் கோதை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts