உடன் அமுலுக்கு வரும் வகையில் வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
வீட்டுப் பொருட்களுக்காக அறவிடப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான தேச நிர்மாண வரி, பொருளாதார சேவைகளுக்கான கட்டண வரி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் வரி ஆகியனவும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பங்குச்சந்தையில் அறவிடப்படும் மூலதன வரி, உழைக்கும் போதே செலுத்தும் வரி, பிடித்து வைத்தல் வரி, வரவு வரி ஆகியவற்றையும் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அறக்கட்டளை நிலையங்கள் மற்றும் சமய ஸ்தலங்களுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் உழைக்கும் பணத்திற்கு முழுமையாக வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு வரியை 25 வீதத்தினால் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.