வவுனியா- குறிசுட்டகுளம் பகுதியில் காணாமல்போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறிசுட்டகுளம் காட்டிற்குள், மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து குறித்த இளைஞனை பொலிஸார் சடலமாக இன்று (திங்கட்கிழமை) கண்டெடுத்துள்ளனர்.
காட்டிலுள்ள கிரவல் வெட்டப்பட்ட கிடங்குக்குள் தண்ணீர் தேங்கிய பகுதிக்குள் வீழ்ந்து இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் நீதவானின் வருகையின் பின்னர் மருத்துவ சோதனைக்காக வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் கனகராஜன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.