நாளையும் நாளை மறுதினமும் மின்தடை

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்துவதால் நாளை வியாழக்கிழமையும், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

நாளை வியாழக்கிழமை பி.ப. 2 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி, சுன்னாகம், இணுவில், மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை, தாவடி, கொக்குவில், நாச்சிமார் கோயிலடி, ஆனைக்கோட்டை, நவாலி, கோண்டாவில், கோம்பயன் மணல் பிரதேசம், கொட்டடி, நாவாந்துறை, மீனாட்சிபுரம், மற்றும் பட்டணப்பகுதி நீங்கலான யாழ்.மாநகர சபை பகுதி ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என யாழ்.மாவட்ட மின் பொறியியலாளர் அலுவலகத்தினர் அறிவித்துள்ளனர்.

Related Posts