ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த அறிவித்தல் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்ற கல்வி பணிமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.