இலங்கையில் வேகமாக பரவும் கண்நோய்! மக்களை எச்சாிக்கும் தேசிய கண் வைத்தியசாலை!!

இலங்கையில் மிகவேகமாக கண்நோய் பரவிவரும் நிலையில் மக்கள் மிக அவதான மாக இருக்குமாறு தேசிய கண் வைத்தியசாலை இயக்குனா் மோனிக்கா விஜேரத்ன எச்சாிக்கை விடுத்திருக்கின்றாா்.

கண்களில் கண்ணீர் வடிதல், கண் சிவத்தல் மற்றும் கண்களில் வலி ஆகிய அறிகுறி களே இந்த நோய் தொற்றிற்கான காரணமாகும். இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும்.

என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ரஜரட்ட பல்கலைக்கழக த்தில் மாணவர்களுக்கு இடையில் பரவிய வைரஸ் நோய் தொற்று காரணமாக அந்த பல்கலைக்கழத்தின் 4 பீடங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts