யாழ்ப்பாணம் நகர மண்டப அடிக்கல் நாட்டுவிழாவின் மொத்தச் செலவீனமாக 8 லட்சத்து 47 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்டுள்ளதாக மாநகர சபை கணக்கிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் நகர மண்டப அடிக்கல் விழாவிற்கான செலவீனத்தை மாநகர சபை ஏற்றுக்பொள்வது தொடர்பில் மாநகர சபைநில் சர்ச்சை ஏற்பட்ட சமயம் அடிக்கல் நாட்டுவிழாவுடன் பணி நிறுத்தப்பட்டால் சபையின் நிதி வீண் விரயமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டு ஐயம் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் வாதப் பிரதிவாதங்களின் மத்தியில் நிதிச் செலவீணங்களிற்கான அனும்மி வழங்கப்பட்டு நிகழ்வும் இடம்பெற்று தற்போது கட்டுமானப் பணிகள் இடம்பெறுகின்றன. இதில் சிற்றூண்டி மற்றும் தண்ணீரிற்காக 2 லட்சத்து 27 ஆயிரத்து 200 ரூபாவும் மதிய போசணமும் அதனுடன் இணைந்த தண்ணீர்ச் செலவிற்காக 4 லட்சத்து 85 ஆயிரத்து 475 ரூபா 48 சதமும் ஏற்பட்டுள்ளதோடு ஏனைய செலவுகளாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்ட வகையிலேயே மொத்தம் 8 லட்சத்து 47 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.