பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வட பகுதி சட்டத்தரணிகள் அமைதி நிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இந்தப் போராட்டம் நடைபெற்றது.வடக்கில் வவுனியா கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் இணைந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இந்தவகையில் யாழ். மாவட்ட சட்டத்தரயிகள் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த அமைதியாக தமது எதிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
நீதி தேவதையின் படத்தை தாங்கியவாறும் தமது வாயினை கறுப்புத் துணியால் கட்டியபடியும் அமைதி நிலை போராட்டம் ஒன்றிணை நீதிமன்ற முன்றலில் ஆரம்பித்து சுப்பிரமணியம் பூங்காவை சுற்றியுள்ள வீதியூடாக வந்து மீண்டும் நீதிமன்றத்தினை வந்தடைந்தனர்.