யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சிங்களமொழிமூல முன்பள்ளி!!

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சிங்கள மொழிமூலமான முன்பள்ளி ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் எனத் தம்மை வெளிப்படுத்துபவர்களால் இந்த முன்பள்ளி வரும் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் அரியாலை – நெடுங்குளம் சந்தியில் இந்த முன்பள்ளி ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வோதயத்தின் அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஒற்றுமையை வளர்க்கும் வகையில் மும்மொழிக் கல்விக்காக சிங்கள மொழிமூலமான முன்பள்ளி யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஆரம்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts