எம்மைப்பற்றி

யாழ்ப்பாணம் இலங்கைத்தமிழர்கள் பற்றி பேசப்படும்போது எல்லாம் ஞாபகத்தில் வரும் இடம். அந்த பெயரில் பல இணையத்தளங்கள் இயங்குகின்றன .ஆங்காங்கே சமூகத்தில் விதிவிலக்காக நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து அதுதான் யாழ்ப்பாணம் என்ற மாயையினை வெளி உலகிற்கு காட்டும் பணியில் பல இணையத்தளங்கள் செய்படுகின்றன.

ஊடகதர்மத்திற்கு விரோதமான செய்திகள் கொண்டு வெறுமனே பார்வையாளர்களை ஈர்க்கும் தேவைக்காக மட்டும் இயங்கும் இணையத்தளங்களின் நடவடிக்கைகளினால் ஏற்பட்ட விசனத்தால் எழுந்தது தான் இந்த இணையத்தளம் .  எமது பிராந்தியத்தின் உண்மையான சமூக அரசியல் கலை கலாச்சார விழுமியங்களை உரிய முறையில் வெளிக்கொணரும் செய்தித்தளமாக இந்த jaffnajournal.com இணையத்தளம் தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கின்றது.

எமது தளத்தில் வரும் செய்திகள் தொடர்பிலான உங்கள் விமர்சனங்களை நாம் என்றும் வரவேற்கின்றோம்.